LIC

Tuesday, April 22, 2014




இதப்படிக்கலைன்னா.. உங்க உயிர்,உடல் சீக்கிரம் உங்களை விட்டு போயிடும்…..
HEALTH IS WEALTH… NEW METHOD FOR NON SLEEPING
GOOD FOOD HABITS FOR OUR HEALTHS
NEW METHOD OF EASY TO MAINTAIN SOUL AND BODY
நமது உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது, ரத்தநாளங்கள் மூலம் செல்களுக்குத் தேவையான பொருள்கள் சென்று சேர்கின்றன. அதுபோல கழிவுகளும் ரத்தநாளங்கள் மூலமாகவே கழிவு உறுப்புகளுக்குச் சென்று வெளியேறுகின்றன. உடலில் உள்ள எந்த செல்லுக்கு நோய் வந்தாலும், அதற்க முக்கியமான சில காரணங்கள் இருக்கின்றன.
http://sivaparkavi.files.wordpress.com/2012/03/e2.jpg?w=658
ரத்தத்தில் உள்ள பொருட்கள் கெட்டுப்போவது ஒரு காரணம், ரத்தத்தில் இருக்க வேண்டிய பொருள்டகள் இல்லாமற் போவது இன்னொரு காரணம். நமது உடலுக்குத் தேவையான அளவுக்கு ரத்தம் இல்லாமல் போவது மூன்றாவது காரணம். நமது உடலில் உள்ள செல்கள் குறிப்பிட்ட ஒழுங்குமுறையுடன் செயல்படுகினற்ன. அப்படிச் செயற்படாமல் போவது நான்காவது காரணம். நோய் வாய்ப்பட்டவுடன் அல்லது நோயுற்றதாக நினைத்தவுடன் நம் மனம் பாதிக்கப்படுவது ஐந்தாவது காரணம்.
இந்தக் காரணங்களில் முதலில் சொன்ன மூன்று காரணங்களையும் நாம் சரி செய்துவிட்டால் மீதம் உள்ள இரண்டு காரணங்களும் தானகவே சரியாகிவிடும். அப்படியானால் இதயம் பாதிப்படைந்தால், சிறுநீரகம் பாதிப்படைந்தால், கண்கள் பாதிப்படைந்தால், பாதிக்கப்பட்ட செல்களைச் சரி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட செல்களைச் சரி செய்ய, செல்களுக்குத் தேவையான சத்துக்களைத் தரும் ரத்தத்தைச் சரி செய்ய வேண்டும்.
http://sivaparkavi.files.wordpress.com/2012/03/e1.jpg?w=658
அதாவது ரத்தத்தில் உள்ள பொருள் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும். ரத்தத்தில் இருக்க வேண்டிய எல்லாப் பொருட்களும் உரிய அளவில் இருக்க வேண்டும். உடலுக்குத் தேவையான அளவு ரத்தம் இருக்க வேண்டும். தனியாக இதயத்துக்கு என்றும், சிறுநீரகத்துக்கு என்றும் சிகிச்சை தேவையில்லை. இதுதான் செவி வழிதொடு சிகிச்சையின் அடிப்படை.
அப்படியானால் ரத்தத்துக்குத் தேவையான சத்துக்களை எப்படி அளிப்பது?
நாம் உண்னும் உணவில் இருந்தே ரத்தத்துக்குத் தேவையான சத்துப் பொருட்கள் கிடைக்க முடியும், அப்படியானால் எதை உண்னுவது? எப்படி உண்னுவது?
முதலில் பசி வந்தபின்புதான் சாப்பிட வேண்டும், உடலில் உள்ள செல்களுக்குச் சத்துக்கள் தேவை என்னும்போது தான் நமக்குப் பசி எடுக்கிறது. எனவே பசிக்காமல் சாப்பிடக் கூடாது. அடுத்து சாப்பிடும் உணவு நல்லபடியாகச் செரித்து அதிலுள்ள சத்துக்கள் உடலில் சேர வேண்டும்.
வாயைத்திறந்து, திறந்து அவசர அவசரமாக உணவை விழுங்குவதைத் தவிர்க்க வேண்டும். வாயைத்திறந்து மூடுவதன் காரணமாக உணவுடன் காற்றும் வயிற்றுக்குள் செல்கிறது.
உணவை வாயில் போட்டவுடன், உதட்டை மூடிக்கொண்டு உணவு கூழ் போல் ஆகும்வரை மென்று, உணவின் சுவையை நாக்கு உணருமாறு செய்து அதற்குப் பின்பு விழுங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நாக்கில் ஊறும் உமிழ்நீருடன் உணவு கலந்து வயிற்றுக்குள் செல்கிறது. உமிழ்நீர் உணவை நன்கு செரிக்கச் செய்கிறது. எனவே, அவசரமாகச் சாப்பிடக் கூடாது.
இரண்டாவதாக, சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிடும்போது, சாப்பிட்ட பின்பும் நிறையத் தண்ணீர் குடிப்போம். நல்ல பசி உள்ள வேளையில் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கின்றன. நாம் தண்ணீர் குடிக்கும்போது, ஜீரண நீர்கள் நீர்த்துப் போகின்றன. இதனால் செரிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. அதாவது நாம் உண்னும் உணவில் உள்ள சத்துக்கள் உடலில் முழுமையாகச் சேர்வதில்லை.
மூன்றாவதாக, குளித்தவுடனேயே சாப்பிடக் கூடாது. நீங்கள் வெந்நீரிலோ, தண்ணீரிலோ குளிக்கும்போது நமது உடலின் வெப்பநிலை மாறுபடுகிறது. அப்படி மாறும் வெள்ளநிலையை உடலின் வெப்பநிலைக்கு அதாவது 37 டிகிரி சென்டிகிரேடு அளவுக்குக் கொண்டு வர நமது உடலில் உள்ள செல்கள் முழுக்க முயற்சி செய்கின்றன. குளித்து முடித்தவுடன் உடலில் ஏற்பட்ட வெப்பநிலை மாறுதலை சரி செய்வதற்காக உடலின் செல்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கும் போது நாம் சாப்பிட்டால் உணவு ஜீரணமாவதில் பிரச்சினை ஏற்படும். அதேபோன்று சாப்பிட்டதும் குளிக்கக்கூடாது.
தண்ணீர் குடிப்பதிலும் நமக்குச் சரியான திவில்லாமல் இருக்கிறோம். எவ்வளவு தண்ணீர் குடிப்பது? உடலுக்குத் தண்ணீர் தேவையென்றால் தாகம் எடுக்கும், தாகம் எடுத்தவுடன் தேவைப்படும் அளவுகுத் தண்ணீர் குடித்தால் போதுமானது.
தேவையான அளவுக்குத் தூங்க வேண்டும். தேவையான அளவு தூக்கம் என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடும். கடுமையான உடல் உழைப்பாளிக்கு அதிகத் தூக்கம் தேவைப்படும். ஏசி அறையில் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து மூளை உழைப்புச் செய்பவருக்கு அதிகத் தூக்கம் தேவைப்படாது. எனவே தூக்கம் வரவில்லை என்று தூக்க மாத்திரைகளை விழுஙகுவதில் அர்த்தமில்லை. தூக்கம் வரவில்லை என்றால் கண்ணை மூடிக்கொண்டு படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். தூக்கம் வரும்பொது தூங்கிக் கொள்ள வேண்டும். போதுமான அளவு தூங்கினால்தான் செல்கள் உடலில் நன்கு செயல்பட முடியும். செல்லுக்கு அறிவு உண்டு. தேவையான சத்துப் பொருட்கள் உரிய அளவில் இருந்தால் கெட்டுப்போன செல்கள் தம்மைத் தாமே சரி செய்து கொள்ளும்.
http://sivaparkavi.files.wordpress.com/2012/03/e3.jpg?w=658
எவற்றைச் சாப்பிடுவது? உணவு வகைகளில் சமைக்காமல் அப்படியே சாப்பிடும் சுவையுள்ள பழங்கள், வெள்ளரி போன்ற காய்கள் போன்றவற்றுக்கு நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். அதற்கடுத்து முளைவிட்ட தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சமைத்த சைவ உணவுக்கு அடுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அசைவ உணவு வகைகளுக்கு அதற்கு அடுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். டீ, காப்பி, மது போன்றவற்றைச் சாப்பிடக்கூடாது.
எவற்றை மட்டும் சாப்பிட்டு நாம் மூன்று நாட்களுக்கு மேல் உயிரோடு இருக்க முடியுமோ, அவையெல்லாம் உணவு எவற்றை மட்டும் சாப்பிட்டு மூன்று நாட்களுக்கும் மேல் உயிரோடு இருக்க முடியாதோ, அவையெல்லாம் உணவு அல்ல. மது போன்றவை உணவு அல்ல.
உடல் உழைப்பு உள்ளவர்களைத் தவிர, பிறர் உடல் பயிற்சி, நடைப் பயிற்சி, யோகாசனம் போன்றவற்றைச் செய்து வந்தால் நோயின்றி வாழலாம். வந்த நோயையும் சரிபடுத்திவிடலாம். இதுதான் எளிய மருத்துவமுறை.
ஆனால், வெளிப்புறத்திலிருந்து உடலுக்குத் தாக்குதல் ஏற்பட்டால், உதாரணமாக கீழே விழுந்து கால் எலும்பு முறிந்தால் அதை இந்த மருத்துவமுறையின் மூலம் சரி செய்ய முடியாது. அதற்கு மாவுக்கட்டோ, அறுவைச் சிகிச்சையோ செய்துதான் சரிசெய்ய முடியும்.
நன்றியுடன், திரு. K.S.பழனிசாமி ,LIC Agent,  9360080622