LIC

Wednesday, February 23, 2011

நான்முகன் நாயகியே!வந்தனங்கள்





நான்முகன் நாயகியே!

வந்தனங்கள் தந்து உன்னை
வாழ்த்துகின்றேன் நான் இங்கே!

பைந்தமிழில் சொல் எடுத்து
பாரெங்கும் புகழ் மணக்க!

பாமாலை பாடுகின்றேன்
பாத மலர் நான் தொழுதே!

வெண் தாமரையில் உறைபவளே
என் நாவினிலே உறைந்திடுவாய்!

நித்தம் உனை வேண்டி
முத்தமிழில் பாடுகின்றேன்!

நான்மறை போற்றுகின்ற
நான் முகனின் நாயகியே!

ஆய கலைகள் அத்தனையும்
                          நீ தருவாய் எந்தனுக்கு

No comments:

Post a Comment