LIC

Tuesday, February 22, 2011

MY THOUGHT


K.S.PALANISAMY, AGENT: LIC OF INDIA

LIFE INSURANCE CORPORATION OF INDIA
1.   1.  என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை என்னிடம் இருக்கிறது.

2.
எத்தனையோ இடர்ப்பாடுகளை மீறி, நான் இது வரை சாதித்தவைகளை ஒவ்வொன்றாக நினைவு படுத்திப் பார்க்கிறேன்.

3.
என்னை விட வயதிலோ, தகுதியியோ, பணபலத்திலோ குறைந்தவர்கள் செய்த சாதனைகளை எண்ணிப் பார்க்கிறேன்.

4.
நான் மிக மிகக் கடுமையாக வெறுக்கும் என் எதிரி ஒருவன், இதே காரியத்தை வெகு சுலபமாக செய்து முடித்துவிட்டான் என்று நினைத்துப் பார்க்கிறேன்.

5.
நான் இதை வெற்றிகரமாக முடித்து விட்டால், எனக்குக் கிடைக்கும் புகழ், பாராட்டு, லாபம், அங்கீகாரம், புதிய வாய்ப்புகள் ஆகியவற்றை கற்பனை செய்து பார்க்கிறேன்.

6.
நான் இதைச் செய்ய முடியாமல் போனால், எனக்குக் கிடைக்கும், இகழ்ச்சி, நஷ்டம், ஏமாற்றம், நழுவும் வாய்ப்புகள் ஆகிய வற்றை கற்பனை செய்து பார்க்கிறேன்.

7.
நான் இதை சாதித்துவிட்டால், என் தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அடையப் போகும் மகிழ்ச்சி, பெருமை ஆகியவற்றை நினைத்துப் பார்க்கிறேன்.

8.
ஏற்கனவே பலர் இதை வெற்றிகரமாக செய்துவிட்டார்கள்; பலர் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.

9.
இதைச் சாதிப்பதற்கான எல்லாத் தகுதிகளும், திறமைகளும் என்னிடம் இருக்கின்றன என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

10.
இதைத்தவிர, மற்ற எந்த வேலைகளும் இப்போது எனக்கு முக்கியமில்லை என்று முடிவெடுத்து விட்டேன்.

11.
எனது எல்லாச் சக்திகளையும் முழுவதுமாக இதில் ஈடுபடுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

12.
இடையில், வேறெந்த விஷயத்திலும், கவனத்தையும், நேரத்தையும் சிதறவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

13.
எனது ஊக்கத்தைக் குலைக்கும் விமர்சனங்களை லட்சியம் செய்ய மாட்டேன்.

14.
இடையில் எதிர்ப்படும் இடையூறுகளைக் கண்டு தளர்ந்து விடாத மன உறுதி என்னிடம் இருக்கிறது.

15.
இதைவிடப் பெரிய விஷயங்களை எல்லாம் சாதிக்கப் பிறந்தவன் நான் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

16.
முடித்துக் காட்டுகிறேன் பார் என்று இதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்கிறேன்

நன்றி
அன்புடன்
K.S.பழனிசாமி B.A.,
LIC முகவர்
93600 80622
kspgeethalic@gmail.com
kspgeetha@yahoo.co.in

No comments:

Post a Comment